ADDED : ஜூலை 26, 2025 12:44 AM

புதுடில்லி:ஸ்மார்ட்போன், கம்ப் யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க, சீனாவின் 'லாங்சீர்' நிறுவனத்துடன் கூட்டு வர்த்தகத்தில் இணைய, டிக்ஸான் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, டிக்ஸான் நிறுவனம், பங்கு சந்தையில் தாக்கலில் தெரிவித்திருப்பதாவது:
சீன நிறுவனமான லாங்சீர் நிறுவனத்துடன் கூட்டு சேர, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் இருந்து டிக் ஸான் டெக்னாலஜிஸ் ஒப்புதல் பெற்றுள்ளது.
ஒப்பந்தத்தின் கீழ் துவங்கப்பட உள்ள நிறுவனத்தில், டிக்ஸான் நிறுவனம் 74 சதவீத பங்குகளையும்; லாங்சீர் 26 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். கூட்டு நிறுவனத்துக்கு 'டிக்ஸ்டெல் இன்போகாம்' என பெயரிடப்பட்டுள்ளது.
விவோ, சியோமி, ஓப்போ மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது லாங்சீர் நிறுவனம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.