வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் ரூ.1 லட்சம் கோடிக்கு அரசு ஒப்புதல் 3.50 கோடி பேருக்கு வேலை வழங்க இலக்கு
வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் ரூ.1 லட்சம் கோடிக்கு அரசு ஒப்புதல் 3.50 கோடி பேருக்கு வேலை வழங்க இலக்கு
ADDED : ஜூலை 01, 2025 10:46 PM

புதுடில்லி:ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேலைவாய்ப்பு ஊக்கு விப்பு திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இளைஞர்கள், குறிப்பாக முதல் முறை பணியாளர்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கான முக்கிய அம்சங்கள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3.50 கோடி பேருக்கு வேலை வழங்க இலக்கு
இதில் 1.92 கோடி பேர் முதல் முறை பணியாளர்களாக இருப்பர்
முதல் முறை பணியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என, முதல் ஆண்டில் இரண்டு முறை 15,000 ரூபாய் ஊக்கத்தொகை
நடப்பாண்டு ஆகஸ்ட் முதல், 2027ம் ஆண்டு ஜூலை வரை பணிக்கு சேரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்
பயன்பெற விரும்புவோர், இ.பி.எப்.ஓ.,வில் பதிவு செய்திருக்க வேண்டும்
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களுக்கு
புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களுக்கு, ஒரு பணியாளர் வீதம், மாதம் அதிகபட்சமாக 3,000 ரூபாய் ஊக்கத்தொகை
திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது பணியில் தொடர வேண்டும்
பணியாளர்கள் 50 பேருக்கு குறைவான கொண்ட நிறுவனங்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு, குறைந்தபட்சம் இரண்டு நபர்களை பணியமர்த்த வேண்டும்
பணியாளர்கள் 50 பேருக்கு அதிகமான கொண்ட நிறுவனங்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து நபர்களை பணிஅமர்த்த வேண்டும்
தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் நான்கு ஆண்டு காலம் வழங்கப்படும்
பிற நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டு காலம் வழங்கப்படும்.
நோக்கம்
முதல் முறை பணியாளர்களுக்கு வேலை வழங்குவது
முறைசார் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது
அனைத்து துறைகளுக்கும் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவது
தயாரிப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது.