பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க அரசு உதவி
பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க அரசு உதவி
ADDED : செப் 24, 2025 12:58 AM

சென்னை:மத்திய, மாநில அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், 'ஜெம் போர்ட்டல்' வாயிலாக, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்கின்றன.
இந்த போர்ட்டலில் பதிவு செய்வதற்கு பல, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தெரிவதில்லை.
எனவே, ஜெம் போர்ட்டலில் பதிவு செய்து, பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பது தொடர்பாக உதவ, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, 'ஆன்லைன்' அமர்வை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம், இன்று நடத்துகிறது. மதியம், 3:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்த பயிற்சியில் பங்கேற்க, 'form.startuptn.in/GMP' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதில், ஜெம் போர்ட்டலில் பதிவு செய்து, அதில் இடம்பெற பொருட்கள், சேவை பட்டியலை பதிவேற்றம் செய்வது, பொருட்களை விற்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.