ADDED : அக் 30, 2025 02:59 AM

புதுடில்லி: கடந்த சந்தைப்படுத்தல் ஆண்டில், எத்தனால் உற்பத்திக்கு குறைவாக சர்க்கரை ஒதுக்கப்பட்டதால், நாட்டின் சர்க்கரை ஆலைகளில் கையிருப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டுக்கான சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2024 ---- -25ம் சந்தைப்படுத்தல் ஆண்டில், சர்க்கரை ஆலைகள், எத்தனால் உற்பத்திக்கு கணிக்கப்பட்ட 45 லட்சம் டன் சர்க்கரைக்கு பதிலாக, 34 லட்சம் டன் சர்க்கரையை மட்டுமே ஒதுக்கி உள்ளன. இதன் காரணமாக,சர்க்கரை ஆலைகளில், நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டுக்கான சர்க்கரை ஆரம்ப கையிருப்பு அதிகரித்துள்ளது. மேலும், 2025 - 26ம் ஆண்டுக்கான சர்க்கரை உற்பத்தி, 3.40 கோடி டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு உள்நாட்டு தேவையான 2.85 கோடி டன்னை விட அதிகமாகும்.
தேவைக்கு அதிகமாக கையிருப்பு இருப்பதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். அமைச்சர்கள் கமிட்டி, அடுத்த வாரம் இது குறித்து முடிவு செய்ய வாய்ப்புள்ளது. தற்போது, சர்வதேச விலை நிலவரமும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஏற்றதாக இல்லை. எனவே, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஏற்றுமதி மட்டுமே, லாபத்தை தரக்கூடிய வாய்ப்பாக உள்ளது.
அரசை பொறுத்தவரை, உள்நாட்டு நுகர்வு, எத்தனால் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மீதமுள்ளவை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது அக்டோபரில் துவங்கி செப்டம்பரில் முடிவடையும்.
கடந்த 2024 - 25ம் சந்தைப்படுத்தல் ஆண்டில், 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி

