'என்.எல்.சி.,யில் இறுதி கட்டத்தில் பசுமை ஹைட்ரஜன்'
'என்.எல்.சி.,யில் இறுதி கட்டத்தில் பசுமை ஹைட்ரஜன்'
ADDED : செப் 05, 2025 11:20 PM

நெய்வேலி:பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கு தேவையான முக்கிய கருவியான எலக்ட்ரோலைசர்கள் வாங்குவதற்கான இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக என்.எல்.சி., தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தெரிவித்து உள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தின் நெய்வேலியில் 4 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான அடுத்தக்கட்டத்தை எட்டி உள்ளோம். தற்போது எலக்ட்ரோலைசர்ஸ் கொள்முதல் செய்வதற்கான கட்டத்தை அடைந்து உ ள்ளோம்.
இந்த ஆலை, நாளொன்றுக்கு 300 கிலோ, 99.999 தூய்மையான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தில் என்.எல்.சி., முன்னோடி நிறுவனமாகத் திகழும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெய்வேலி, செப். 6-
பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கு தேவையான முக்கிய கருவியான எலக்ட்ரோலைசர்கள் வாங்குவதற்கான இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக என்.எல்.சி., தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தின் நெய்வேலியில் 4 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான அடுத்தக்கட்டத்தை எட்டி உள்ளோம். தற்போது எலக்ட்ரோலைசர்ஸ் கொள்முதல் செய்வதற்கான கட்டத்தை அடைந்து உ ள்ளோம்.
இந்த ஆலை, நாளொன்றுக்கு 300 கிலோ, 99.999 துாய்மையான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தில் என்.எல்.சி., முன்னோடி நிறுவனமாகத் திகழும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.