தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சிறுதொழில்களையும் உள்ளடக்கியதே வளர்ச்சி

சிறுதொழில்களையும் உள்ளடக்கியதே வளர்ச்சி

சிறுதொழில்களையும் உள்ளடக்கியதே வளர்ச்சி


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் வேகம் எடுத்து வந்தாலும், உற்பத்தி திறனை உயர்த்துவதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் நவீன உற்பத்தி முறைகள் சென்றடைய வேண்டியது அவசியம். தொழில்நுட்ப அறிவு, மேலாண்மை திறன் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை பரவலாக்குவதே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும்.

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிக உறவுகள், நம்பகமான கடன் வசதிகள், ஒப்பந்தங்களை செயல்படுத்தும் சட்ட நடைமுறைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகிய நிறுவன ரீதியான மாற்றங்கள் முக்கிய பங்காற்றின.

ஆனால், தொழிற்புரட்சிக்கு பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து திரட்டி, உற்பத்தியில் பயன்படுத்துவதன் வாயிலாக அதே வளங்களை கொண்டு அதிக பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் உருவானது.

இதன்படி, பொருளாதார ந டவடிக்கை கள் திறம்பட நடைபெறுவதற்கு நிறுவன அமைப்புகள் உதவுகின்றன.

அதே நேரத்தில், அந்த நடவடிக்கைகளின் உற்பத்தி திறனை அதி கரிப்பது தொழில்நுட் பம் தான். இவை ஒன்றுக்கொன்று துணையாக செயல்படுபவை.

உற்பத்தி திறன்



இந்தியாவில் ஜி.எஸ்.டி., ஜன் விஸ்வாஸ் சட்டம், தொழிலாளர் சட்ட தொகுப்புகள் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் வணிக நடவடிக்கைகளில் உள்ள தடைகளை குறைக்கவும், விதிமுறை இணக்கத்தை எளிமைப்படுத்தவும், பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், விதிமுறைகளை எளிமைப்படுத்துவது மட்டுமே இலக்காக இருக்க முடியாது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் உண்மையில் அதிகரிக்கிறதா என்பதையும் மதிப்பிட வேண்டும்.

இதற்கு முக்கியமான அளவுகோல், ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு. அதாவது, வேலைவாய்ப்பில் உள்ள ஒவ்வொரு நபரும் சராசரியாக எவ்வளவு பொருளாதார மதிப்பை உருவாக்குகிறார் என்பதை காட்டும் அளவீடாகும். தொழில்நுட்பம், முதலீடு, திறன், நிர்வாகம் மற்றும் வளங்களை பயன்படுத்தும் திறன் ஆகியவை இதில் பிரதிபலிக்கின்றன.

சீனாவுடன் ஒப்பீடு



சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை கவனிக்கத்தக்கது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, 2008ல் சீனாவில் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு 15,770 டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 14.66 லட்சம் ரூபாயாக இருந்தது. இது 2025-ல் 44.75 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் 11.40 லட்சம் ரூபாயாக இருந்த உற்பத்தி மதிப்பு 23.10 லட்சம் ரூபாயாக மட்டுமே அதிகரித்துள்ளது. சீனாவை விட இது பாதியளவே.

அதாவது, சீனாவின் உற்பத்தித் திறன் மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏறத்தாழ இரு மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. சீனாவில் ஜி.டி.பி., வளர்ச்சியும், ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு வளர்ச்சியும் பெரும்பாலும் ஒரே வேகத்தில் உயர்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் இந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

சிறுதொழில்கள் முக்கியம்



இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், உற்பத்தி திறன்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு தொழில்துறைகளில் தொழில்நுட்ப திறனை ஆழப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் உற்பத்தி திறன் சவால் என்பது புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் மட்டும் இல்லை. ஏற்கனவே கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப அறிவையும் உற்பத்தி முறைகளையும் அவற்றை பயன்படுத்த வேண்டிய நிறுவனங்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் தொழில்துறை அடித்தளத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் போதிய நிர்வாக திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிதி ஆதாரங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.

தொழில்நுட்ப அறிவு



ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஆலோசகர்களை நியமிப்பது சாத்தியமில்லை. அதேநேரம், நிபுணர்களின் அறிவையும் அனுபவத்தையும் குறைந்த செலவில் சிறு நிறுவனங்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

இதற்கு டிஜிட்டல் தரவு தளங்களும் ஏ.ஐ., தொழில்நுட்பமும் உதவக்கூடும். ஒரு நிறுவனம் தனது உற்பத்தி தரம் ஏன் தொழில்துறை சராசரியை விட குறைவாக உள்ளது, அதை மேம்படுத்த என்ன வழிமுறைகளை கையாளலாம் என்ற கேள்விகளுக்கு ஏ.ஐ., அடிப்படையிலான உரையாடல் வழிகாட்ட முடியும்.

முக்கிய 3 அம்சங்கள்



இந்தியாவின் உற்பத்தி திறனை மேம்படுத்த எண்ணுதல், வகைப்படுத்துதல், பட்டியலிடுதல் ஆகிய மூன்று அம்சங்கள் முக்கியமானவை.

முதலாவதாக, ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்தி செலவு, பொருட்களின் தரக்குறைபாடு, மின்சார பயன்பாடு, இயந்திரங்களின் செயல்பாட்டு திறன் மற்றும் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தி மதிப்பு ஆகியவற்றை கணக்கிட வேண்டும்.

இரண்டாவதாக, தொழில்துறைகளின் தொழில்நுட்ப திறன்களை துறை, பொருள், உற்பத்தி நடைமுறை மற்றும் மதிப்பு தொடரின் பல்வேறு கட்டங்கள் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். எந்த பொருட்களை இந்திய நிறுவனங்களால் போட்டித்தன்மையுடன் உற்பத்தி செய்ய முடியும், எந்த துறைகளில் இறக்குமதி தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கிறோம் என்பதை கண்டறிய இது உதவும்.

மூன்றாவதாக, உற்பத்தி அனுபவங்கள், பொறியியல் தீர்வுகள், தரப்பரிசோதனை முடிவுகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு அனைவருக்கும் கிடைக்க செய்யப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது விதிமுறை சீர்தி ருத்தங்களால் மட்டுமே உறுதியாகாது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதுடன், ஏற்கனவே உள்ள அறிவையும் உற்பத்தி முறைகளையும் நாட்டின் லட்சக்கணக்கான சிறு நிறுவனங்களுக்கு கொண்டு சேர்ப்பதே நம் நாட்டின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான முக்கிய வழியாக இருக்கும்.

–ஸ்டீவ் ராஜ்புரோஹித்



தொழில் சங்கங்கள், உற்பத்தி குழுமங்கள், பரிசோதனை ஆய்வகங்கள், அரசு அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் உள்ள தரவுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

மாவட்ட தொழில் அலுவலகங்கள், மாநில தொழில்துறை அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்கள் வாயிலாக நிறுவனங்களிடமிருந்து தரவுகளை சேகரிக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பொதுவான உரையாடல் தளத்தை உருவாக்கி, சிறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில்நுட்ப தகவல்களை எளிதில் பெற வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஐ.எம்.எப்., ஆய்வு


சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்., ஆய்வின்படி, இந்தியாவில் மிகச்சிறிய நிறுவனங்களின் உற்பத்தி திறன் பெரிய நிறுவனங்களின் உற்பத்தி திறனில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாக உள்ளது. உற்பத்தி திட்டமிடல், சரக்கு இருப்பு மேலாண்மை, தரக்கட்டுப்பாடு போன்ற எளிய நடைமுறைகளை கூட பல சிறு நிறுவனங்கள் முறையாக பின்பற்றுவதில்லை.
நம் நாட்டின் ஜவுளி உற்பத்தி ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், தொழில்முறை மேலாண்மை நடைமுறைகளை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக தரம், செயல்திறன் மற்றும் சரக்கு மேலாண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் சராசரி உற்பத்தி திறன் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us