தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வீடுகள் விற்பனை மிதமாக உயர்வு

 வீடுகள் விற்பனை மிதமாக உயர்வு

 வீடுகள் விற்பனை மிதமாக உயர்வு


UPDATED : ஜூலை 10, 2026 03:00 AM

ADDED : ஜூலை 10, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2026 03:00 AM ADDED : ஜூலை 10, 2026 02:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில், புதிய வீடுகளின் வினியோகம் பெருமளவு குறைந்துள்ளது, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'நைட் பிராங்க்' வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

நடப்பாண்டு ஜனவரி - ஜூன் காலகட்டத்தில், இந்நகரங்களில் வீடுகள் விற்பனை 0.7 சதவீதம் என்ற மிதமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்நகரங்களில் சகாய விலை மற்றும் நடுத்தர பட்ஜெட் வீடுகளின் வரத்து குறைந்துள்ளது.

குறைந்த விலை நிலங்களின் பற்றாக்குறை மற்றும் சிமென்ட், கம்பி போன்ற கட்டுமான பொருட்களின் வினியோக செலவு அதிகரித்துள்ளதால், கட்டுமான நிறுவனங்கள் தற்போது குறைந்த விலை பட்ஜெட் வீடுகள் கட்டுவதை பெருமளவு குறைத்துள்ளன.

நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் வாங்கும் வகையிலான வீடுகளின் புதிய வினியோகம் இல்லாததால், அந்த பிரிவில் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது கட்டுமான நிறுவனங்கள் அதிக லாப வரம்பு கொண்ட சொகுசு மற்றும் பிரீமியம் ரக வீடுகளின் வினியோகத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகின்றன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image 1597216


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us