தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிறுவனங்களை இணைக்கும் ஐ.ஐ.டி., தரவுத்தளம்: 3 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் தகவல்கள் சேகரிப்பு

நிறுவனங்களை இணைக்கும் ஐ.ஐ.டி., தரவுத்தளம்: 3 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் தகவல்கள் சேகரிப்பு

நிறுவனங்களை இணைக்கும் ஐ.ஐ.டி., தரவுத்தளம்: 3 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் தகவல்கள் சேகரிப்பு


UPDATED : நவ 03, 2026 04:41 PM

ADDED : நவ 03, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 04:41 PM ADDED : நவ 03, 2026 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் பணியை, சென்னை ஐ.ஐ.டி., ஆதரவுடன் செயல்படும் 'ஒய்னோஸ் வென்ச்சர் என்ஜின்' மேற்கொண்டு வருகிறது.இந்திய ஸ்டார்ட்அப் துறை குறித்த நம்பகமான தகவல்கள் எளிதில் கிடைக்காத நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யின் 'க்ரெஸ்ட்' ஆராய்ச்சி மையம், மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக விரிவான தரவுகளை திரட்டியது.அதன் அடிப்படையில் உருவான தரவுத்தளத்தை தொழில்முனைவோர் பயன்படுத்தும் வகையில் ஒய்னோஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.இதன் வாயிலாக, முதலீட்டுக்கு ஏற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கண்டறியவும், தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய நிறுவனங்களை அடையாளம் காணவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்


‘‘எங்களிடம் 3.4 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தரவுகள் உள்ளன.ஒரு தொழில் நிறுவனத்தின் கொதிகலனில் துருப்பிடித்தல் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு தொழில்நுட்ப தீர்வு வழங்கக்கூடிய ஸ்டார்ட்அப்பை தரவுத்தளத்தின் மூலம் கண்டறிந்து இணைக்க முடியும்.இதற்காக நிறுவனங்கள் போட்டிகளை அறிவித்து, விண்ணப்பங்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.’’
- பேராசிரியர் தில்லை ராஜன்,
நிறுவனர், ஒய்னோஸ் வென்ச்சர் என்ஜின்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us