இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்தது ஐ.எம்.எப்.,
இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்தது ஐ.எம்.எப்.,
ADDED : ஜூலை 10, 2026 02:41 AM

வாஷிங்டன்: ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம், 2026 - -27 நிதியாண்டுக்கான, இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை 6.5 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைத்துள்ளது.
ஐ.எம்.எப்., வெளியிட்டுள்ள புதிய பொருளாதார மதிப்பீட்டில், சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் உயர்ந்திருப்பது, இந்தியாவின் வளர்ச்சிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் வலுவாக தொடர்வது, முதலீடுகள் மற்றும் நுகர்வு நிலையாக இருப்பது ஆகியவை வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027- - 28 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக ஐ.எம்.எப்., உயர்த்தியுள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும் என அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
