உள்ளடக்கத்திற்கு செல்ல

‘இறக்குமதி கையுறைகள் மீது பொருட்குவிப்பு வரி வேண்டும்’
‘இறக்குமதி கையுறைகள் மீது பொருட்குவிப்பு வரி வேண்டும்’
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 10:24 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: தாய்லாந்து, மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் மருத்துவ ரப்பர் கையுறைகள் மீது பொருட்குவிப்பு வரி விதிக்க மத்திய வர்த்தக அமைச்சகத்தின் டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகள் இயக்குநரகம், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
இதுகுறித்து டி.ஜி.டி.ஆர்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தாய்லாந்து, மலேசிய நாடுகளிலிருந்து குறைவான விலையில் இறக்குமதியாகும் மருத்துவ ரப்பர் கையுறைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பொருட்குவிப்பு வரி விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கையுறைகளுக்கு 41 – 53 ஆயிரம் ரூபாய்க்குள் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
