ADDED : அக் 13, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நாட்டின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில், நடப்பாண்டின் முதல் 9 மாதத்தில் 34.30 கிகாவாட் சேர்த்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 71 சதவீதம் அதிகமாகும். இதில், சூரிய சக்தி திறன் 68.90 சதவீதமும், காற்றாலை திறன் 88.80 சதவீதமும் அதிகரித்து உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திறன் 247.30 கிகாவாட்டாக அதிகரித்து உள்ளது.