தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு அதிகரிக்கும் ஏற்றுமதி வாய்ப்பு

பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு அதிகரிக்கும் ஏற்றுமதி வாய்ப்பு

பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு அதிகரிக்கும் ஏற்றுமதி வாய்ப்பு


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 05, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 05, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால், வரியில்லாமல் பாரம்பரிய அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்ய, வர்த் தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதாக, அரிசி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சோழநாடு உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

தமிழகத்திலிருந்து பி.பி.டி., மகேந்திரா, கோ.51 ஆகிய உயர் விளைச்சல் சன்ன ரக அரிசி வகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதேபோல், பாரம்பரிய சன்ன அரிசி ரகங்களான சீரக சம்பா, வெள்ளை பொன்னி, துாயமல்லி உள்ளிட்ட ரகங்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்து வருகிறது. எங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக ஆண்டுக்கு 20 முதல் 40 டன் வரை ஏற்றுமதி செய்கிறோம்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால், வரியில்லாத மற்றும் குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகளுக்கு விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us