இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது
ADDED : நவ 12, 2025 11:19 PM

புதுடில்லி: இந்திய சர்வதேச வர்த்த கண்காட்சி-2025, டில்லியில் நாளை முதல் 27ம் தேதி வரை இரு வாரங்கள் நடக்கிறது.
இந்திய தொழில் மேம்பாட்டு அமைப்பான, ஐ.டி.பி.ஓ., ஆண்டு தோறும் இக்கண்காட்சியை நடத்தி வருகிறது.
டில்லி பாரத் மண்டபத்தில் 44 ஆவது கண்காட்சி, நடக்க இருக்கிறது.
உள்நாட்டு, வெளிநாட்டு அரங்குகளில் எண்ணற்ற கலை, கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
பீகார், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளின் ஆதரவுடன் இவ்வாண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.
அங்கு ஒவ்வொரு மாநிலம் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் ஏ.ஐ., தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டீப்டெக், வேளாண்மை முதலிய பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை பறைசாற்றும் வகையில் அரங்குகள் இடம்பெறும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஸ்டால்கள் அமைக்கும் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கண்காட்சியில், யு.ஏ.இ., சீனா, ஈரான், தென்கொரியா, எகிப்து உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெறுகின்றன.
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை இக்கண்காட்சியைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்று இந்திய தொழில் மேம் பாட்டு அமைப்பு தெரிவித்து ள்ளது.

