அமெரிக்க வரிவிதிப்பு யூரேசியன் கூட்டமைப்புடன் மீண்டும் இந்தியா வர்த்தக பேச்சு
அமெரிக்க வரிவிதிப்பு யூரேசியன் கூட்டமைப்புடன் மீண்டும் இந்தியா வர்த்தக பேச்சு
ADDED : ஆக 21, 2025 11:26 PM

புதுடில்லி:இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்துள்ள நிலையில், ரஷ்யா தலைமையிலான யூரேசியன் பொருளாதார கூட்டமைப்புடன் வர்த்தக பேச்சை இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவுக்கு 25 சதவீத வரியுடன், கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக அறிவித்த டிரம்ப், இரு நாட்டு பொருளாதாரங்களையும் உயிரற்றவை என விமர்சித்தார்.
டிரம்ப் வரி விதிப்பால், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சு தடைபட்டுள்ள நிலையில், ரஷ்யா தலைமையிலான யூரேசியன் கூட்டமைப்புடன் இந்தியா வர்த்தக பேச்சை மீண்டும் துவங்கியுள்ளது.
உக்ரைன் போர் காரணமாக, கடந்த 2022ல் இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. இந்த கூட்டமைப்பில் ரஷ்யா தவிர்த்து, அர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் மொத்த பொருளாதார மதிப்பு, 553 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
*கூட்டமைப்பில் ரஷ்யா தவிர்த்து, ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன * உக்ரைன் போர் காரணமாக, கடந்த 2022ல் இவற்றின் வர்த்தக பேச்சுகள் நிறுத்தப்பட்டன.