ADDED : செப் 19, 2024 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ரிசர்வ் வங்கி, வட்டி குறைப்புக்கு முன்னர், உணவுப் பிரிவு பணவீக்கத்தை அதிக கவனத்தில் கொள்ளும்.
எங்களுடைய பார்வையில், உணவுப் பிரிவு பணவீக்கம் தொடர்பான கவலையால், ரிசர்வ் வங்கி, இந்தாண்டு ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை. உணவுப் பிரிவு பணவீக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில், நாம் நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
சி.எஸ்.செட்டி
தலைவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

