'மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தில் பங்கேற்க ஆர்வம்'
'மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தில் பங்கேற்க ஆர்வம்'
ADDED : அக் 02, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தின் கீழ் இதுவரை 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 59,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 91,600 பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 1.41 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.