ADDED : மே 27, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் மியூச்சுவல் பண்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கு, ஜியோ - பிளாக்ராக் நிறுவனத்துக்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தின் போது, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்கு விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் ஆகியவை இணைந்து, கடந்த அக்டோபரில் ஜியோ பிளாக்ராக் சொத்து மேலாண்மை நிறுவனத்தை துவங்கின. கிட்டத்தட்ட 117 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், இரு நிறுவனங்களும் 50:50 என்ற அளவில் பங்களிப்பை கொண்டுள்ளன.