மியூச்சுவல் பண்டு முதலீட்டில் மிரட்டும் கேரள மாநிலம்
மியூச்சுவல் பண்டு முதலீட்டில் மிரட்டும் கேரள மாநிலம்
UPDATED : ஜூலை 14, 2025 09:09 AM
ADDED : ஜூலை 13, 2025 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சிறப்பான சேமிப்பு பழக்க வழக்கங்களால், மியூச்சுவல் பண்டு முதலீடு வளர்ச்சியில், கேரளா சிறந்து விளங்குவதாக 'ஆம்பி' எனப்படும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைமை நிர்வாகி வெங்கட் சலாசனி தெரிவித்திருப்பதாவது: நாட்டின் மியூச்சுவல் பண்டு வளர்ச்சியில், கேரளா படிப்படியாக தன் இருப்பை வலிமைப்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்து வரும் நிதி விழிப்புணர்வு, வளர்ந்து வரும் மின்னணுமயம், வலுவான சேமிப்பு கலாசாரம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.