ரூ.6,000 கோடிக்கு தீபாவளி வர்த்தகம் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தகவல்
ரூ.6,000 கோடிக்கு தீபாவளி வர்த்தகம் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தகவல்
UPDATED : அக் 12, 2025 04:15 AM
ADDED : அக் 12, 2025 02:03 AM

திருப்பூர்:தீபாவளி கால உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம், இதுவரை 6,000 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளதாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னலாடைகள் மட்டுமல்லாது, தரமான பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்படும் இருபாலருக்கான உள்ளாடை விற்பனையும், தீபாவளி பண்டிகை ஆர்டரில் அதிகம் இடம்பெறுகின்றன.
கடந்த செப். மாதம் 2வது வாரத்தில் துவங்கி, தொடர்ந்து, ஆடைகள் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. சிறப்பு தள்ளுபடி சலுகையுடன் தமிழகம் முழுதும் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்தாண்டு, தீபாவளி பண்டிகைகால வர்த்தகம், 20 சதவீதம் அதிகரித்துள்ளது; மொத்தம், 6,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தகம் நடந்திருக்கும்,' என்றார்.