ஐ.டி.பி.ஐ., வங்கியை வாங்க கோட்டக் மஹிந்திரா ஆர்வம்
ஐ.டி.பி.ஐ., வங்கியை வாங்க கோட்டக் மஹிந்திரா ஆர்வம்
ADDED : செப் 04, 2025 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:ஐ.டி.பி.ஐ., வங்கியை வாங்கும் முயற்சியில் கோட்டக் மஹிந்திரா வங்கியும் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.டி.பி.ஐ., வங்கியின் 60 சதவீத பங்குகளை வாங்குவதில், ஏற்கனவே எமிரேட்ஸ் என்.பி.டி., மற்றும் பேர்பேக்ஸ் பைனான்சியல் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், தற்போது கோட்டக் மஹிந் திரா வங்கியும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.டி.பி.ஐ., வங்கியின் பெரும்பான்மை பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 45.48 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசமும், 49.24 சதவீத பங்குகள் எல்.ஐ.சி., வசமும் உள்ளன.