UPDATED : ஜூலை 09, 2025 12:56 AM
ADDED : ஜூலை 09, 2025 12:54 AM

கடைசி நேரத்தில் ஆர்வம்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, நாள் முழுவதும் மந்தமாக இருந்த பங்குச் சந்தை குறியீடுகள், வர்த்தக நேர முடிவில் உயர்வு கண்டன. சந்தை நிறைவடைவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வங்கித்துறை மற்றும் குறிப்பிட்ட சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு வாங்கப்பட்டன.
![]()  | 
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், இதுகுறித்த முழுமையான விபரங்கள் கிடைக்கும் வரை பொறுமையை கடைப்பிடிக்க முதலீட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு தரப்பில் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் தயக்கம் காட்டினர்.
உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹேங்சேங், தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., என அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையாக வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1வங்கி, தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது
2ஆசிய சந்தைகளின் வலுவான நிலவரம்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள்  26 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
![]()  | 
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று  1 பேரலுக்கு 0.59 சதவீதம் சரிந்து, 69.17 அமெரிக்கடாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா உயர்ந்து, 85.73 ரூபாயாக இருந்தது.


