ADDED : நவ 01, 2025 02:38 AM

புதுடில்லி: எல் அண்டு டி., நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆளில்லா விமான அமைப்புகளை உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய தொலைதுார கட்டுப்பாட்டு விமான அமைப்புகளை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளன.
அமைப்பு என்பது விமானம் மட்டுமல்லாது, அதை தரையில் இருந்து இயக்கும் கட்டுப்பாட்டு கருவிகள், விமான சென்சார் மற்றும் பிற உபகரணங்களையும் உள்ளடக்கியதாகும்.
விரைவில் 87 தொலைதுார கட்டுப்பாட்டு விமான அமைப்புகளை தயாரிப்பதற்கான ஏலத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிக்க உள்ளது. இந்த ஏலத்தில் முதன்மை ஏலதாரராக பங்கேற்க உள்ளதாக எல் அண்டு டி., நிறுவனம் தெரிவித்து உள்ளது.

