சொகுசு கார்களின் விற்பனை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு
சொகுசு கார்களின் விற்பனை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு
ADDED : ஜூலை 12, 2025 10:44 PM

சென்னை:நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், சொகுசு கார்கள் விற்பனை, 0.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது, கொரோனாவுக்கு பின், மோசமான முதல் அரையாண்டு விற்பனையாகும்.
நாட்டின் முதல் மூன்று சொகுசு கார் நிறுவனங்களான, மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யு., ஆடி ஆகியவை, நடப்பாண்டில் இதுவரை, 18,915 கார்களை விற்பனை செய்துள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி நிறுவனங்களின் விற்பனை சரிந்துள்ளது.
பி.எம்.டபிள்யு., 7,774 கார்களை விற்றுள்ளதால், அதன் விற்பனை, 9.50 சதவீதம் உயர்ந்தது. இதில், மினி நிறுவன கார்களின் விற்பனையும் அடங்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை 30 சதவீதம் சரிந்து, 9,013 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆடி நிறுவனத்தைப் பொறுத்தவரை 14 சதவீதம் சரிவு கண்டு, 2,128 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
ஆனால், மின்சார சொகுசு கார்களின் விற்பனை இதில் பாதிப்படையவில்லை. பி.எம்.டபிள்யு., மின்சார கார்களின் விற்பனை, 234 சதவீதமும், பென்ஸ் மின்சார கார்களின் விற்பனை, 157 சதவீதமும் உயர்ந்துஉள்ளன.

