ADDED : மார் 21, 2025 11:21 PM
மும்பை; மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை, பெயின் கேப்பிடல் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, நேற்று பங்குச் சந்தையில் மணப்புரம் பைனான்ஸ் பங்கு விலை 10 சதவீதம் உயர்வு கண்டது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு, நகைக்கடன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மணப்புரம் பைனான்ஸ், அமெரிக்காவை சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேப்பிடல், 4,385 கோடி ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாக, நேற்று தெரிவித்தது.
இதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தின் போது, மணப்புரம் பைனான்ஸ் பங்குகள் விலை, ஒரே நாளில் 10 சதவீதம் உயர்வு கண்டு, 52 வாரத்தில் புதிய உச்சமாக பங்கு ஒன்று 247.60 ரூபாயை எட்டியது. வர்த்தக நேர முடிவில், 8 சதவீத உயர்வுடன், 234.40 ரூபாய் என்றளவில் இருந்தது.
பெயின் கேப்பிடல் நிறுவனத்துக்கு முன்னுரிமை அடிப்படையில், 9.29 கோடி பங்குகளை, பங்கு ஒன்று 236 ரூபாய்க்கு மணப்புரம் பைனான்ஸ், ஒதுக்கீடு செய்ய உள்ளது.