UPDATED : செப் 02, 2025 11:56 AM
ADDED : செப் 01, 2025 11:11 PM

புதுடில்லி: இந்திய தயாரிப்புத் துறை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிவேக இயக்க மேம்பாட்டை கண்டிருப்பதாக எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு திறன் மற்றும் ஆரோக்கியமான தேவை உயர்வு சூழல் ஆகியவை இதற்கு உதவியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் நடைபெற்ற தொழில் விரிவாக்கம், தயாரிப்பு துறை வளர்ச்சிக்கு உதவியது.
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பைத் தொடர்ந்து, மற்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்திருப்பதும் பி.எம்.ஐ., குறியீடு உயரக் காரணமாகின.
கடந்த 57 மாதங்களில் இல்லாத அதிக அளவிலான புதிய ஆர்டர்கள், கடந்த ஜூலையில் இந்திய தயாரிப்பு துறைக்கு கிடைத்தன.
ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் இதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் எச்.எஸ்.பி.சி., - பி.எம்.ஐ., அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.