தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/துாத்துக்குடியில் கடல்சார் திட்டங்கள் ரூ.18,400 கோடி மதிப்பில் தயாராகிறது

துாத்துக்குடியில் கடல்சார் திட்டங்கள் ரூ.18,400 கோடி மதிப்பில் தயாராகிறது

துாத்துக்குடியில் கடல்சார் திட்டங்கள் ரூ.18,400 கோடி மதிப்பில் தயாராகிறது


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடியில் கிட்டத்தட்ட 1 8,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப் பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் விஜயகுமார், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

பசுமை ஹைட்ரஜன் முன்னோடி திட் ட ஆலை, காற்றாலை மின் வசதிகள் உள்ளிட்டவற்றையும் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார்.

இதுகுறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறியதாவது:

துாத்து க்குடி துறைமுகத்தில் 18,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் உட்கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகி றது. இதன் வாயி லாக, நாட்டின் சர்வதேச வர்த்தகம், தொழில் வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி பொருளாதாரத்தில் தென் தமிழகத்தின் பங்கு ஆகியவை மேலும் வலுப் பெறும்.

அத்துடன் 17,167 கோடி ரூபாய் மதிப்பிலான வெளித்துறைமுக மேம்பாட்டு திட்டம், 520 கோடி ரூபாய் மதிப்பிலான 7ம் எண் த ளத்தில் அமைக்கப்படும் சரக்கு பெட்டக முனையம் மற்றும் 750 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் காற்றாலை முனையம் ஆகிய மூன்று திட்டங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us