ADDED : ஜூன் 07, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மே மாத வாகன மற்றும் கட்டுமான இயந்திரங்களின் விற்பனை அறிக்கையை, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில், 22.12 லட்சம் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் விற்பனையான நிலையில், இந்த மே மாதத்தில், 22.89 லட்சம் வாகனங்கள், இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிக திருமண நாட்கள், அதிகரித்த குறுவை பயிர்கள் அறுவடை, கிராமப்புறங்களில் அதிகரித்த தேவை ஆகியவை காரணமாக, கடந்த மே மாதத்தில், இருசக்கர, மூன்று சக்கர, டிராக்டர் பிரிவுகளின் விற்பனை ஏற்றம் கண்டாலும், பயணியர் கார், வர்த்தக வாகனம், கட்டுமான இயந்திரம் ஆகிய பிரிவுகளின் விற்பனை, வீழ்ச்சி கண்டுள்ளன.