UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 10:45 PM

புதுடில்லி: மெட்ரோ ரயிலில் சரக்குகளை அனுப்புவோர், இனி அதற்கான ‘இ–வே பில்’ ஆவணத்தை இணையதளத்தில் தயாரிக்கலாம் என, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., விதிப்படி, மாநிலத்திற்குள்ளும், பிற மாநிலங்களுக்கும் 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ‘இ–வே பில்’ எனப்படும் மின்னணு சரக்கு போக்குவரத்து ஆவணம் அவசியம்.
இதுவரை சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகை போக்குவரத்துக்கு இவ்வசதி இருந்தது. மத்திய அரசு அக்., 26ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பிரிவை தேர்வு செய்வோர், சரக்கு போக்குவரத்து ஆவண எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே ஒருங் கிணைந்த ‘இ–வே பில்’ ஆவணங்களை தயாரிக்க முடியும். ஜி.எஸ்.டி., இணையதளத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட மென்பொருளை ப யன்படுத்துவோருக்கு, இவ்வசதி இதுவரை சோதிக்கப்பட்டு வந்தது.
