உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 10:36 PM

அ நிறம் | அளவு
வாஷிங்டன்: உலகளவில் ஒரு நாளுக்கும் மேலாக முடங்கியிருந்த மைக்ரோசாப்ட் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இது தொடர்பாக ஏற்பட்ட தடங்கலுக்கு மைக்ரோசாப்ட் மன்னிப்பு கேட்டுள்ளது.
கடந்த நவ., 12ல் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட அனைத்து மைக்ரோசாப்ட் சேவைகளும் தடைபட்டன. இந்த தொழில்நுட்ப கோளாறால், உலகம் முழுதும் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சர்வர்கள் திடீரென செயலிழந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
