கடன் கேட்டு விண்ணப்பிக்க ஸ்டார்ட்அப்களுக்கு வெப்சைட் மத்திய நிதி அமைச்சகம் அறிமுகம்
கடன் கேட்டு விண்ணப்பிக்க ஸ்டார்ட்அப்களுக்கு வெப்சைட் மத்திய நிதி அமைச்சகம் அறிமுகம்
ADDED : நவ 12, 2025 11:29 PM

புதுடில்லி: ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பம் செய்வதற்கென இணைய தளத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
'ஜன்சமர்த்' என்ற போர்ட்டலில் 'ஸ்டார்ட்அப் காமன் அப்ளிகேஷன் ஜர்னி' என்ற பெயரில் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஒரே தளத்தை பயன்படுத்தி அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் விண்ணப்பிக்கலாம். கடன் விண்ணப்பம், சலுகைகளை ஒப்பிடுதல் மற்றும் விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்தல் ஆகியவற்றை இத்தளத்தின் வாயிலாக எளிதாக மேற்கொள்ளலாம்.
சி.ஜி.எஸ்.எஸ்., எனும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், இந்த தளத்தின் வாயிலாக 20 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும்.
பான் கார்டு, ஜி.எஸ்.டி., பதிவு எண், வருமான வரி தாக்கல் போன்ற தரவுகள் ஒருங்கிணைக் கப் பட்டுள்ளதால், இதன் செயல்பாடு வேகமாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பெண் தொழில்முனைவோருக்கு சிறப்பு வட்டி சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப் பட் டுள்ளது.

