எம்.எஸ்.எம்.இ., நிலுவை தொகை ரூ.50,000 கோடியாக அதிகரிப்பு
எம்.எஸ்.எம்.இ., நிலுவை தொகை ரூ.50,000 கோடியாக அதிகரிப்பு
ADDED : ஏப் 13, 2025 09:53 PM

புதுடில்லி:பெரு நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையின் மதிப்பு, கடந்த மார்ச் மாதத்துடன் 50,000 கோடி ரூபாயை கடந்துஉள்ளது.
சிறு, குறு நிறுவனங்களின் நலனை காக்கும் நோக்கில், இந்நிறுவனங்களிடமிருந்து சரக்கு மற்றும் சேவைகளை பெறும் நிறுவனங்கள், 45 நாட்களுக்குள்ளாக உரிய தொகையை செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், ஆண்டுதோறும் இந்த நிலுவைத் தொகை அதிகரித்தபடியே உள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் 41,900 கோடி ரூபாயாக இருந்த நிலுவை, நடப்பாண்டு மார்ச்சில் 20 சதவீதம் உயர்ந்து, 50,359 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
இந்த சிக்கலுக்கு சுமுக தீர்வு காண்பதற்காக, மத்திய அரசால் துவங்கப்பட்ட சமாதான் தளத்தில் இதுவரை 2.31 லட்சம் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில், 46,892 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன.
நிலுவை தொகைகள் அதிகரிப்பதால் குறு, சிறு நிறுவனங்களின் அன்றாட செயல்பாட்டுக்கு தேவையான மூலதனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.