
*பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்துக்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில், 335.31 சதவீதம் உயர்ந்து, 2025 ஜூலையில், 33.32 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு இதற்கு முக்கியமான காரணம்.
* மியூச்சுவல் பண்டுகளுக்கும், வங்கி வைப்பு நிதிக்கும் உள்ள விகிதம், கடந்த 10 ஆண்டுகளில், 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. குடும்ப சேமிப்பானது, மியூச்சுவல் பண்டுகளை நோக்கி மாறுவதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
*மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 10 மாத உச்சத்தை எட்டியது. இது சந்தை ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில், வலுவான நிதி வரவைக் காட்டுகிறது.
4. இந்தியாவின் மொத்த உள்நாட்டு சேமிப்பு விகிதம், 2024 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.7 சதவீதமாக இருந்தது. இது, 2023 நிதியாண்டில் 30.70 சதவீதமாக இருந்தது. இருப்பினும், 2020 நிதியாண்டில் இருந்த 32.-33 சதவீதத்தை விட, இது சற்று குறைவாக உள்ளது
5. குடும்ப நிதி சேமிப்பு, 2024 நிதியாண்டில் ஜி.டி.பி.,யில் 5.30 சதவீதமாக உயர்ந்தது. இது, 2023 நிதியாண்டில் 5 சதவீதமாக இருந்தது
6 யு.டி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், வெற்றி சுப்ரமணியத்தை தன் புதிய நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமித்துள்ளது
7. சீனாவை பின்பற்றி, இந்தியாவும் மியூச்சுவல் பண்டு கட்டணங்களைக் குறைத்து, கடினமான காலங்களில் முதலீட்டை ஊக்குவிக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
8 இந்தியாவில் வயது வந்தவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே அடிப்படை பட்ஜெட், முதலீடு மற்றும் கடன் மேலாண்மை உள்ளிட்டவற்றில் நிதி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். இளைஞர்களில் இது 16.70 சதவீதமாக உள்ளது. மேலும், 24 சதவீதம் பேர் மட்டுமே எளிய வட்டி கணக்கீடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக உள்ளனர்.