ADDED : நவ 05, 2025 12:44 AM

புதுடில்லி:இந்திய உர உற்பத்தியாளர் சங்கம் எப்.ஏ.ஐ.,யின் புதிய தலைவராக கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கர சுப்ரமணியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் இவ்வமைப்பின் இணைத்தலைவராகவும் தென் மண்டலத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். உரத்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சங்கர சுப்ரமணியன், பாஸ்பேட், பொட்டாசிய துறை களில் நிபுணத்துவம் பெற்றவர்.
இந்துஸ்தான் உரவராக் அண்ட் ரசாயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிபா பிரசாத் மொஹந்தி, இச்சங்கத்தின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1955ல் உர உற்பத்தி, விநியோகம், இறக்குமதி, இயந்திர உற்பத்தி, ஆய்வு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளோரின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பு இந்த சங்கம் ஆகும்.
கடந்த 1993ல் முருகப்பா குழுமத்தின் இ.ஐ.டி., பாரி இந்தியா நிறுவனத்தின் நிதிப்பிரிவில் பணியில் சேர்ந்த சங்கர சுப்ரமணியன், 2003ல் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சேர்ந்து அதன் தலைமை நிதி அலுவலராக இருந்தார்.

