துாத்துக்குடியில் புதிய தொழில் பூங்காவுக்கு ஒப்புதல்
துாத்துக்குடியில் புதிய தொழில் பூங்காவுக்கு ஒப்புதல்
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 11:12 PM

சென்னை: தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துாத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தில், தொழில் பூங்கா அமைக்க, ‘சிப்காட்’ நிறுவனத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
துாத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால், தென் மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்க புதிய தொழில் பூங்கா அமைக்கும் பணியில், ‘சிப்காட்’ நிறு வனம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, துாத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து தொழில் பூங்காக்கள் உள்ளன. தற்போது ஆறாவதாக முடிவைத்தானேந்தல் கிராமத்தில், புதிய தொழில் பூங்கா அமைக்க, 2,570 ஏக்கர் நிலம் எடுப்பு பணிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந் த பணிக்காக, 350 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
