‘எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பு தொழில்முனைவோரிடம் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்’
‘எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பு தொழில்முனைவோரிடம் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்’
UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 11:00 PM

புதுடில்லி: மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தங்களது வருடாந்தி ர கொள்முதலில், எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோர் நடத்தும் சிறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை அதிகரிக்குமாறு மத்திய எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் கொள்கையின்படி, பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் மொத்த கொள்முதலில் குறைந்தபட்சம் 4 சதவீதத்தை, எஸ்.சி.,– எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள் நடத்தும் சிறுதொழில்களிடம் இருந்து வாங்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்குரி ய திட்டங்களை வகுக்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
டில்லியில் 30 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஹப் திட்டம், எஸ்.சி., – எஸ்.டி., சிறு நிறுவனங்களின் கொள்முதலை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது குறித்து வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2025- – 26 நிதியாண்டில் அந்நிறுவனங்களிடமிருந்து செய்யப்பட கொள்முதல் 36 மடங்கு உயர்ந்துள்ளது.
எனினும், மொத்த கொள்முதலில் 4 சதவீத இலக்கை எட்ட விற் பனையாளர் பதிவு நடைமுறைகளை எளிதாக்குதல், தயாரிப் பு மற்றும் சேவை பொருத்தம் பார்த்தல், மண்டல அளவிலான தொடர்புகளை ஏற்படுத் துதல் ஆகிய உதவிகளை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
