'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்'; மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்
'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்'; மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்
UPDATED : ஆக 23, 2025 01:16 PM
ADDED : ஆக 23, 2025 12:49 AM

சென்னை :'ஒரே தொழில் கொள்கை, கட்டண முறை மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ள துறை முகங்கள் குறித்த புதிய சட்டத்தால், இந்திய துறைமுகங்கள் அடுத்தகட்ட வளர்ச்சி அடையும்' என மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, 1908ம் ஆண்டு இயற்றப்பட்ட பழைய இந்திய துறைமுகங்கள் சட்டத்தை மாற்றி, 'புதிய இந்திய துறைமுகங்கள் சட்டம் 2025' கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
இந்திய துறைமுக புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், உலகத் தரத்துக்கு துறைமுகங்களை கொண்டு செல்வது, முதலீட்டை ஈர்ப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது என்பதை நோக்கமாக கொண்டதாக இருக்கும். இந்திய துறைமுகங்களில் நிர்வாகத்தை மாற்றியமைப்பதோடு, மத்திய - - மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வர்த்தக வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்.
ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எளிய நடைமுறைகள், மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பயன் கிடைக்கும். இதுபோன்ற புதிய நடவடிக்கைகளால், இந்திய துறைமுகங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.