தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சிமென்ட் மூலப்பொருள் ஏற்ற புதிய ரயில் வசதி

சிமென்ட் மூலப்பொருள் ஏற்ற புதிய ரயில் வசதி

சிமென்ட் மூலப்பொருள் ஏற்ற புதிய ரயில் வசதி


UPDATED : நவ 16, 2026 05:32 PM

ADDED : நவ 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:32 PM ADDED : நவ 16, 2026 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கல்லக்குடி பழங்காநத்தத்தில், சிமென்ட் தயாரிப்புக்கு பயன்படும் 'கிளிங்கர்' எனும் பொருளை இயந்திரங்கள் வாயிலாக சரக்கு ரயில்களில் ஏற்றும் புதிய வசதியை தெற்கு ரயில்வே துவக்கியுள்ளது.இவ்வசதியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ், கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.

என்ன வசதி?



சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களை அதிக வெப்பத்தில் சூடாக்குவதன் வாயிலாக கிளிங்கர் தயாரிக்கப்படுகிறது. இதை ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து அரைத்து சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.தால்மியாபுரத்தில் உள்ள தால்மியா சிமென்ட் ஆலையில் தயாரிக்கப்படும் கிளிங்கரை, இயந்திரங்கள் வாயிலாக நேரடியாக சரக்கு ரயில் பெட்டிகளில் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கிருந்து மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நல்லியில் உள்ள மீனாட்சி சிமென்ட் ஆலைக்கான சரக்கு முனையத்துக்கு கிளிங்கர் கொண்டு செல்லப்படுகிறது.

கூடுதல் வருவாய்



புதிய வசதி வாயிலாக மாதந்தோறும் 50,000 முதல் 60,000 டன் வரை கிளிங்கர் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக தெற்கு ரயில்வேக்கு ஆண்டுக்கு 28.80 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கல்லக்குடியில் தால்மியா சிமென்ட் ஆலைக்கான தனி ரயில் பாதை, 1963ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 40 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்டது.இப்புதிய வசதி, தொழில் நிறுவனங்களின் ரயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த உதவும் என திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us