தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ புதிய சோலார் தயாரிப்புகள் 'ஸ்வெலெக்ட்' அறிமுகம்

 புதிய சோலார் தயாரிப்புகள் 'ஸ்வெலெக்ட்' அறிமுகம்

 புதிய சோலார் தயாரிப்புகள் 'ஸ்வெலெக்ட்' அறிமுகம்


ADDED : ஜன 22, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையை சேர்ந்த சூரிய மின்சக்தி நிறுவனமான, 'ஸ்வெலெக்ட் எனர்ஜி', 'நியுமர்ஜி' என்ற பெயரில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, அதன் நிர்வாக இயக்குநர் அருள் குமார் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் செல்லப்பன் தெரிவித்ததாவது:

'நியுமரிக் பவர் சிஸ்டம்ஸ்' நிறுவனம், தற்போது ஸ்வெலெக்ட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவையில் உள்ள தொழிற்சாலையின் சூரிய மின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 1 ஜிகாவாட். இதனை, 2.2 ஜிகாவாட்டாக உயர்த்த 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.

விரிவாக்க பணிகளின் ஓர் அங்கமாக, 'நியுமர்ஜி' என்ற பெயரில், புதிய தயாரிப்பு தொகுப்பை அறிமுகம் செய்கிறோம். வீடுகள், சிறு அலுவலகங்களுக்காக 1-10 கி.வா., 'நியூமர்ஜி ஹோம்' சோலார் பேனல்கள், 5-20 கி.வா திறனுள்ள 'நியுமர்ஜி ஹைப்ரிட்' பேட்டரிகள், தொழிற்சாலைகளுக்காக 3-50 கி.வா., திறனுள்ள, 'நியூமர்ஜி ஹெச்.பி' பேட்டரிகள் ஆகி யவை இவற்றில் அடங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us