நோக்கியா -- எச்.எம்.டி., குளோபல் ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
நோக்கியா -- எச்.எம்.டி., குளோபல் ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
ADDED : செப் 17, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நோக்கியா பிராண்டு பெயரில் சாதாரண பியூச்சர் போன் தயாரிப்பதற்கான உரிமம் தொடர்பாக, பின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை, எச்.எம்.டி., குளோபல் நிறுவனம், மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்துள்ளது.
கடந்த 2016ல் இருந்து எச்.எம்.டி.,குளோபல் நிறுவனம், இந்தியா மற்றும் சீனாவில், நோக்கியா பெயரில், சாதாரண மொபைல் போன் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, நோக்கியா நிறுவனத்துடன், எச்.எம்.டி., குளோபல் மேற்கொண்ட ஒப்பந்தம், வரும் 2026ம் ஆண்டோடு காலாவதியாக உள்ளது.
இந்நிலையில், அதனை, மேலும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பாக இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால், சந்தையில் நோக்கியா சாதாரண போன் தொடர்ந்து கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.