ADDED : ஜூன் 22, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
59,41,000
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 19,499 கோடி ரூபாய் உயர்ந்து, 59.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், தங்க கையிருப்பும் தற்போது, 7.34 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, நாட்டின் 11 மாத இறக்குமதிகளையும், வெளிநாட்டு கடனில் சுமார் 96 சதவீதத்தையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.