தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/என்விடியா சி.இ.ஓ., ஜென்சன் ராஜினாமா

என்விடியா சி.இ.ஓ., ஜென்சன் ராஜினாமா

என்விடியா சி.இ.ஓ., ஜென்சன் ராஜினாமா


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் பதவி விலகியுள்ளார்.

சீன உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், அதை ஒப்புக்கொண்டார். எனினும், உளவு தகவல் எதையும் பகிரவில்லை என்று கூறிய நிலையிலும், அவரை பதவி நீக்க என்விடியா நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜென்சன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ், இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந் த 2013 முதல் என்விடியாவில் பணியாற்றும் கோலெட் கிரெஸ், புதிய பொறுப்புடன் நிதிப்பிரிவு தலைவர் பதவியையும் தொடர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சிஸ்கோ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் இவர் 25 ஆண்டுகள் நிதித்துறையில் பணியாற்றியுள்ளார்.

முழுநேர தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்ய நிறுவனதுக்குள்ளும் வெளியேயும் தேடுதல் நடைபெறும் என்றும் தலைமை மாற்றத்தால் நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள், புதிய தயாரிப்புத் திட்டங்கள் பாதிக்கப்படாது என்றும் என்விடியா தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us