ADDED : பிப் 17, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'ஓலா எலக்ட்ரிக்' நிறுவனம், அதன் மின்சார ஸ்கூட்டர்களின் விலையை, 25,000 ரூபாய் வரை குறைத்துள்ளது.
இம்மாதம், ஓலா மின்சார வாகனங்களின் விலை, 25,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவிஷ் அகர்வால், தனது 'எக்ஸ்' சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, ஓலா 'எஸ்1 புரோ' 1.30 லட்சம் ரூபாய், 'எஸ்1 ஏர்' 1.05 லட்சம் ரூபாய் மற்றும் 'எஸ்1 எக்ஸ்+' 85,000 ரூபாயில் தற்போது துவங்குகின்றன.
இதேபோல் கடந்த வாரம் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் அதன் மின்சார வாகனங்களின் விலையை, 1.20 லட்சம் ரூபாய் வரை குறைத்து இருந்தது.
மின்வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் விலை சரிந்து வருவதை அடுத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களின் விலையை குறைத்து வருகின்றன.