தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஆடை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பிற மாவட்டங்களுக்கும் தர வேண்டும்: ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

ஆடை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பிற மாவட்டங்களுக்கும் தர வேண்டும்: ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

ஆடை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பிற மாவட்டங்களுக்கும் தர வேண்டும்: ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவின் 88 சதவீத ஆடை ஏற்றுமதி, வெறும் 100 மாவட்டங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதாகவும், இதை விரிவுபடுத்தி கூடுதல் மாவட்டங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் ஏ.இ.பி.சி., எனப்படும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நொய்டாவில் நேற்று நடந்த, ‘டெக்ஸ்போர்ட்: ஆடை ஏற்றுமதியை தொடங்குவது, நிலைநிறுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது எப்படி’ என்ற திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் ஏ.இ.பி.சி., பொதுச்செயலர் மிதிலேஷ்வர் தாக்குர் பேசியதாவது:

இந்தியாவின் 100 முன்னணி மாவட்டங்களை சர்வதேச அளவிலான ஏற்றுமதி மையங்களாகவும், வளர்ச்சியை எதிர்நோக்கும் 100 மாவட்டங்களை தற்சார்பு உற்பத்தி மையங்களாகவும் உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

தற்போது, நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 88 சதவீதம், 100 மாவட்டங்களில் இருந்து மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. நம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

எனவே, ஏற்றுமதி தளத்தை விரிவுபடுத்துவதுடன், புதிய மாவட்டங்களையும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடுத்துவது அவசியம்.

இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதிகரித்து வ ருகிறது. இதன் வாய்ப்புகளை ஏற்றுமதியாளர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

குறிப்பாக, டிஜிட்டல் வர்த்தகம், இணையவழி வணிகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய புதிய வர்த்தக ஒப்பந்தங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

2025–26 நிதியாண்டில் ஜவுளி, ஆயத்த ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணி 10 மாவட்டங்கள்

தரவரிசை மாவட்டம் மாநிலம் ஏற்றுமதி மதிப்பு (ரூ. கோடி)

pie chart

1 திருப்பூர், தமிழகம் : 38,677 : 11.89%

2 கௌதம் புத்த நகர், உ.பி., : 21,095 : 6.48%

3 பெங்களூரு அர்பன், கர்நாடகா : 16,205 : 4.98%

4 குருகிராம், ஹரியானா : 15,104 : 4.64%

5 மும்பை, மகாராஷ்டிரா : 12,479 : 3.84%

6 பானிபட், ஹரியானா : 11,448 : 3.52%

7 சூரத், குஜராத் : 10,478 : 3.22%

8 ஆமதாபாத், குஜராத் : 9,366 : 2.88%

9 லுாதியானா, பஞ்சாப் : 7,099 : 2.18%

10 தானே, மகாராஷ்டிரா : 6,321 : 1.94%

பிற மாவட்டங்கள் : 1,77,067 : 54.43%

மொத்தம் : 3,25,339

ஆதாரம்: வர்த்தக ஆய்வு மற்றும் புள்ளிவிபர பொது இயக்குநரகம்

ஜவுளி துறை பி.எல்.ஐ., திட்டம் நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்
ஜவுளி துறைக்கான பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்கு விப்பு திட்டத்தின் நான் காவது சுற்று விண்ணப்பங்கள் நவ., 1 முதல் டிச., 31 வரை பெறப்படுகின்றன. குறைந்தபட்ச ஆண்டு வருவாய் தகுதி 200 கோடி ரூபாயில் இருந்து 100 கோ டி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறும் நிறுவனங்களுக்கு மட்டும் திட்டம் 2033- – 34 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us