‘பி.எல்.ஐ. – 4.0’ திட்டம் அறிவிப்பு சிறு, குறு நிறுவனங்களுக்கு பயன்’
‘பி.எல்.ஐ. – 4.0’ திட்டம் அறிவிப்பு சிறு, குறு நிறுவனங்களுக்கு பயன்’
UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 11:10 PM
திருப்பூர்: உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டத்தில் (பி.எல்.ஐ., – 4.0) மொத்த வர்த்தக உச்சவரம்பு 200 கோடியிலிருந்து 100 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதால், குறு, சிறு ஜவுளி நிறுவனங்கள் ப யன்பெற வாய்ப்பு உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
மத்திய அ ரசின் பி.எல்.ஐ., திட்டத்தில் அதிக முதலீடு மற்றும் மொத்த வர்த்தக நி பந்தனைகள் இருந்ததால், பெரிய நிறுவனங்களே அதிகம் பயன்பெறும் நிலை இருந்தது. விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பி.எல்.ஐ., 4.0 திட்டத்தில் விண்ணப்பிக்க நவ.1 முதல் டிச.31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கால அளவும் 2033–34ம் நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.எல்.ஐ., – 4.0 அதிக நிறுவனங்களின் பங்கேற்பையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கும். புதிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்தி, இரட்டை இலக்க வளர்ச்சியை ஜவுளி துறை இலக்காக கொள்ள வேண்டும்.
– பிரபு தாமோதரன், கன்வீனர், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்
புதிய திட்டத்தால் தொழில்நுட்ப ஜவுளி, விளையாட்டு ஆடைகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், ஜவுளி துறை வளர்ச்சி பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
– சுனில்குமார், தலைவர், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்டம்
