UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 10:44 PM

அரூர்: மரவள்ளி கிழங்கு விலை சரிந்து, டன் 11,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் திருமலை கூறுகையில், ‘‘தர்மபுரி மாவட்டம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய் யப்படும் மரவள்ளி கிழங்கு, சேலம், நாமக்க ல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
‘‘மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் கடந்த மா தம், மரவள்ளி கிழங்கு டன், 15,500 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது டன், 11,500 ரூபாய்க்கு விவசாயிகளி டம் இருந்து இடைத்தரகர்கள் கொள்முதல் செய்கின்றனர்.
‘‘இதனா ல், விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். எனவே, அதிகாரிகள் தனிக்குழு அமைத்து, குறைந்தபட்ச ஆதார வி லையை நிர்ணயம் செய்ய வேண்டும்,’’ என்றார்.
