ஏற்றுமதிக்கு உதவ அதிகாரிகள் பேம் டி.என்., நியமிக்கிறது
ஏற்றுமதிக்கு உதவ அதிகாரிகள் பேம் டி.என்., நியமிக்கிறது
ADDED : நவ 25, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு உதவ, மாவட்ட தொழில் மையங்களில் தனி அதிகாரிகளை நியமிக்கும் பணியில், தமிழக அரசின் 'பேம் டி.என்' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
அந்நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, மாவட்ட தொழில் மையங்களில் தனி அதிகாரிகளை, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் 'பேம் டி.என்' நிறுவனம் நியமிக்க உள்ளது.
அதன்படி தற்போது கோவை, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொழில் மையங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள், ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவர்.

