ADDED : மே 10, 2025 11:51 PM

புதுடில்லி:லாபம் சரிவு, தேவை குறைவு ஆகிய காரணங்களால், பானாசோனிக் நிறுவனம், உலகளவில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பானாசோனிக் நிறுவனம், ஏசி, பிரிஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் சோலார் பேனல், இயந்திரங்கள், முக அடையாள தொழில்நுட்பம், டெஸ்லா கார்களுக்கான மின்சார பேட்டரி ஆகியவற்றையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், திறன் வாய்ந்த, குறைந்த பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக மாற்றம் பெறுவதற்காக, அடுத்த மார்ச் மாதத்துக்குள் உலகளவில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் 5,000 பணியாளர்களும்; பிற நாடுகளில் 5,000 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
உலகெங்கும் பானாசோனிக் நிறுவனத்துக்கு 2.30 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கங்கள் மட்டுமல்லாது, லாபம் ஈட்ட முடியாத வணிகங்களை மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.