சிறு நிதி வங்கி ஆகிறது பினோ பேமென்ட்ஸ் பேங்க் ரிசர்வ் வங்கி ஒப்புதல்
சிறு நிதி வங்கி ஆகிறது பினோ பேமென்ட்ஸ் பேங்க் ரிசர்வ் வங்கி ஒப்புதல்
ADDED : டிச 08, 2025 01:25 AM

மும்பை:பினோ பேமென்ட்ஸ் பேங்க், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் எனப்படும் சிறு நிதி வங்கியாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெறும் நாட்டின் முதல் பேமென்ட்ஸ் பேங்க், பினோ ஆகும்.
பொதுவாக, ஒரு பேமென்ட்ஸ் பேங்க், சிறு கடன் வங்கியாக செயல்பட வேண் டுமென்றால் அது ஐந்து ஆண்டுகள் வணிக செயல்பாட்டை நிறைவு செய்திருக்க வேண்டும். இதனை நிறைவு செய்ததை அடுத்து, பினோ, சிறு கடன் வங்கியாக மாற அனுமதி கோரியது.
விண்ணப்பித்த இரண்டு ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் துவக்க கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் சிறு நிதி வங்கியாக பினோ செயல்பட துவங்கும்.
இந்நிறுவனத்துக்கு தற்போது 2,300 கோடி ரூபாய் டிபாசிட் தொகை உள்ளது. 1.60 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போதைய அனுமதியின் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை விரிவுபடுத்தி சேவையாற்ற முடியும் என்று பினோ பேமென்ட்ஸ் பேங்கின் நிர்வாக இயக்குநர் ரிஷி குப்தா தெரிவித்து உள்ளார்.
தற்போதைய நிலையில் பினோ தவிர்த்து, நாட்டில் 11 சிறு நிதி வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இனி ...
* பெரிய அளவிலான டிபாசிட் பெறலாம்
* தனிநபர், வணிகங்களுக்கு கடன், நிதியுதவி வழங்கலாம்
* வாடிக்கையாளர் சேவைகளை விரிவாக்கலாம்
* 25% கிளைகளை, கிராமப்புறங்களில் இயக்க வேண்டும்.

