உள்ளடக்கத்திற்கு செல்ல

ரூ.14,000 கோடி வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் தொடங்கினார் பிரதமர்
ரூ.14,000 கோடி வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் தொடங்கினார் பிரதமர்
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:47 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பில்டி நகரில், 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், பி.பி.பி.ஆர்.சி., எனப்படும் பாரத் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 24வது பகுதியை மோடி வெளியிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த பகுதியில், நாடு முழுதும் உள்ள கிட்டத்தட்ட 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 18,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
