ADDED : பிப் 23, 2024 12:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த ஜனவரியில், இந்திய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, 725 லட்சம் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆறு மாதங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவை விட அதிகம் எனவும், கடந்த 2019 பிப்ரவரிக்கு பின், இது புதிய உச்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் நாட்டின் சரக்கு கையாளுகை அளவு, கிட்டத்தட்ட 455 லட்சம் டன்களாக இருந்தநிலையில், தற்போது கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கு உயர்ந்துள்ளது.